வணக்கம்
வேளாண் சார்ந்த விளைபொருட்கள் மற்றும் அதனை மதிப்பு கூட்டி விற்பனை செய்யும் வேளாண் சார்ந்த தொழில் முனைவோர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு
விழுப்புரம் மாவட்டம் வல்லம் ஒன்றியத்தில் செயல்பட்டு வரும் வல்லம் கூட்டுப் பண்ணைய உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் கடந்த ஐந்து ஆண்டுகளாக செயல்பட்டு வருகின்றன.
செயல்பாடுகள்.
வல்லம் கூட்டுப் பண்ணைய உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் விவசாயிகளின் விளை பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்து தருகிறது மேலும் நிறுவனத்தில் உள்ள பங்குதாரர்கள் வேளாண் சார்ந்த பொருட்களை மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றி வல்லம் கூட்டுப் பண்ணைய உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் விற்பனை செய்து தருகிறது இதனால் வேளாண் சார்ந்த தொழில் முனைவோர்கள் வாழ்வு மேம்பட செய்கிறது.
இணையதளம்
விவசாயிகளின் விளை பொருட்களை விற்பனை செய்யும் வேளாண் சார்ந்த மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை விற்பனை செய்யவும் வல்லம் கூட்டுப் பண்ணை உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்திற்கான பிரத்யோகமான செந்தூரல் என்ற இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.
விவசாயிகள்
தமிழ்நாட்டில் எந்த பகுதியில் இருக்கும் விவசாயி தான் விளைவித்த வேளாண் விளை பொருட்களை செந்தூரல் இணையதளம் மூலம் பதிவு செய்து அதிக விலைக்கு விற்பனை செய்து கொள்ளலாம்.
உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள்
உழவர்கள் ஒருங்கிணைந்து தொடங்கப்படும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தின் மூலம் அனைத்து விவசாயிகளின் விடை பொருட்கள் மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட வேளாண் பொருட்களை செந்தூரால் இணையதளம் மூலம் விற்பனை செய்து கொள்ளலாம்.
மகளிர் சுய உதவி குழுக்கள்
தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு மகளிர் சுய உதவி குழுக்கள் வேளாண் சார்ந்த மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்கள் மற்றும் கைவினைப் பொருட்களை செந்தூரல் இணையதளம் மூலம் பதிவு செய்து நல்ல விலைக்கு விற்பனை செய்து கொள்ளலாம்.
தனிப்பட்ட வேளாண் தொழில்
முனைவோர் வேளாண் விலை நிலம் இல்லாத நபர்கள் வேளாண் சார்ந்த பொருட்களை மதிப்பு கூட்டி மொத்த விற்பனை செய்ய நினைப்பவர்கள் செந்தூரப் இணையதளம் மூலம் பதிவு செய்து மொத்த விற்பனையை தொடங்கலாம்.
வியாபாரிகள்
வேளாண் சார்ந்த விளை பொருட்களையும் மதிப்புக்கூட்டப்பட்ட வேளாண் பொருட்களையும் மொத்தமாகவும் சில்லறையாகவும் வாங்கி விற்பனை செய்யும் வியாபாரிகள் செந்துரல் இணையதளம் மூலம் தேவைப்படும் பொருட்களை பதிவு செய்து பெற்று விற்பனையை தொடங்கலாம்